×

உரிய ஊதியம் வழங்க கோரி அரசு மருத்துவமனை முன்பு ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்

குன்னூர் : நீலகிரி மாவட்டம் குன்னூர் அரசு மருத்துவமனையில் சுமார் 30க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.இவர்கள் கடந்த பத்து ஆண்டுகளாக தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் கீழ் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு தினக்கூலியாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ரூ.700 என நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் ஒப்பந்தம் எடுத்த நிறுவனம் ரூ.300 மட்டுமே தினக்கூலி தருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. தங்களுக்காக அரசு நிர்ணயத்த சம்பள தொகையை வழங்க கோரி நேற்றுமுன்தினம் முதல் குன்னூர் அரசு மருத்துவமனை முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் வேலை பார்த்ததற்கு சிறப்பு ஊக்க தொகையும் வழங்கவில்லை என்றும், இந்த சம்பளத்தை வைத்துக்கொண்டு குடும்பம் நடத்த முடியவில்லை என்றும் ஒப்பந்த ஊழியர்கள் கவலை தெரிவித்தனர். உரிய சம்பள தொகையை வழங்காவிட்டால் உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்ந்து நடத்துவதற்கும் திட்டமிட்டுள்ளதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.

இரவு, பகல் நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் தற்போது உறை பனி தாக்கம் அதிகரித்துள்ளதால் இரவு நேரத்தில் கம்பளி போன்ற வெம்மை ஆடைகளை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post உரிய ஊதியம் வழங்க கோரி அரசு மருத்துவமனை முன்பு ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Kunnor ,Nilgiri District Kunnor Government Hospital ,Government Hospital ,Dinakaraan ,
× RELATED வெப்பத்தால் ஏற்படும்...